Homeசெய்திகள்அரசியல்ஸ்டாலின் கருணாநிதியை விட பெஸ்ட்- உதயநிதி ஸ்டாலின்

ஸ்டாலின் கருணாநிதியை விட பெஸ்ட்- உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

ஸ்டாலின் கருணாநிதியை விட பெஸ்ட்- உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் முத்தரையர் சமூகத்தின் தலைமை அலுவலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “2019 மக்களவை, 2021 சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என 3 போர்களில் திமுக வெற்றி. 3 போர்களில் வென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2024 நாடாளுமன்ற தேர்தல் 4-வது போர் அதிலும் திமுக வெற்றி பெறும். சமூக நீதியை காக்க செயல்படுவதால்தான் முதலமைச்சரை பார்த்து எதிர்க்கட்சியினர் பயப்படுகின்றனர். அதனால் தான் Stalin is more dangerous than Karunanidhi என்று சொல்கிறார்கள்.

கருணாநிதியை விட சமூக நீதியை காப்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக அக்கறை காட்டுகிறார். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் என்னென்ன திட்டங்கள் தேவையோ அதனை முறையாக செயல்படுத்திவருகிறார். நான் எங்கு சென்றாலும், என்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி செல்லப்பிள்ளை என்றே அழைப்பார்கள்” என்றார்.

MUST READ