அல்லு அர்ஜுன் தம்பி நடிப்பில் டெடி திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டெடி. இந்தப் படத்தினை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து சாயிஷா, கருணாகரன், மகிழ்திருமேனி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஒரு டெடி பியர் பொம்மைக்கு உயிர் கொடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றது.
தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை டார்லிங், கூர்கா, ட்ரிகர் உள்ளிட்ட படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரிஷா சிங், அஜ்மல், ஆலி, முகேஷ் ரிஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் தெலுங்கில் ‘படி’ (BUDDY) என்று தலைப்பிடப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அல்லு சிரிஷின் பிறந்த நாளான இன்று இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முன்னோட்ட வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.