Homeசெய்திகள்இந்தியாதாம்பூல பையில் மதுபாட்டிலையும் சேர்த்து வழங்கிய மணமகள் வீட்டார்!

தாம்பூல பையில் மதுபாட்டிலையும் சேர்த்து வழங்கிய மணமகள் வீட்டார்!

-

 

தாம்பூல பையில் மதுபாட்டிலையும் சேர்த்து வழங்கிய மணமகள் வீட்டார்!
Video Crop Image

திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் மணமகளின் வீட்டார் தாம்பூல பையில் மதுப்பாட்டிலையும் சேர்த்து வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“செங்கோல் குறித்து மத்திய அமைச்சரும், ஆளுநரும் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் கலந்து கொண்டது சரியா?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

சென்னையைச் சேர்ந்த நிர்மல் என்பவருக்கும், புதுச்சேரி மாநிலம், வானரப்பேட்டையைச் சேர்ந்த ஆர்த்தி என்ற மணமகளுக்கும், திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரி நகர பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி மற்றும் சென்னையில் இருந்து மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தாம்பூல பையில் மதுப்பாட்டிலையும் சேர்த்துக் கொடுத்துள்ளனர் மணமகள் வீட்டார். தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இனிப்பு ஆகியவற்றோடு மதுப்பாட்டிலையும் தாம்பூல பையில் சேர்த்து வழங்கியது, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்”- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

இது தொடர்பாக வீடியோக்கள் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ