நள்ளிரவில் அம்பத்தூரில் நடந்த விபத்து – இளைஞர் பரிதாப பலி
சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் நடந்த கோர விபத்தில் சாலையோரம் நின்றிருந்த 20 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ஆட்டோ பைக் மீது மோதி சாலையோரம் நின்றிருந்த இளைஞரின் உயிரை பறித்த சோகம். மின்சார கம்பத்தின் மீது மோதி காரை நிறுத்திய ஆசாமிக்கு தர்மடி கொடுத்து மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்த பொதுமக்கள்.
சென்னை அம்பத்தூர் அடுத்த புதூர் மார்க்கெட் அருகில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு மருந்தகத்தில் மருந்து வாங்க சென்ற பொழுது ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் இருசக்கர வாகனத்தில் இருந்த கண்ணதாசன் மற்றும் முகமது சுனில் என்பவர் மீது அம்பத்தூரில் இருந்து ரெட்ஹில்ஸ் நோக்கி அதி வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்சார கம்பத்தின் மீது மோதி நின்றது.
இதில் முகமது சுனில் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றும் கண்ணதாசன் என்பவர் படுகாயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கட்டுப்பாடு இல்லாமல் காரை ஓட்டி வந்த ஜார்ஜ் மில்லர் என்பவரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து குற்றப்புலனாய்வு ஆய்வாளர் வள்ளி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியதாக பேட்டரி கடை திறப்பதற்காக கடையை சுத்தம் செய்து பெயிண்ட் அடித்து முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல சாலையோரம் நின்று கொண்டிருந்த பொழுது இளைஞர் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவன் பிரபல தனியார் கல்லூரியில் சேர்க்கைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் விபத்தில் மரணம் அடைந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த மகனின் தாய் உடல் சிதைந்து விபத்தில் இருந்த மகனே கட்டி அணைத்து கதறி அழுகும் வீடியோவும் பார்ப்பவரின் கண்களை கண்ணீரில் ஆழ்த்தியது.