Homeசெய்திகள்சினிமாஎஸ்ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர் கூட்டணியின் பொம்மை'... ரிலீஸ் தேதி  அப்டேட்!

எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர் கூட்டணியின் பொம்மை’… ரிலீஸ் தேதி  அப்டேட்!

-

எஸ் ஜே சூர்யா நடித்து நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த ‘பொம்மை‘ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் ஜே சூர்யா தற்போது விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ ராகவா லாரன்ஸ் இன் ‘ ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.மேலும் விஜய் நடிப்பிலும் தனுஷ் நடிப்பிலும் தனது அடுத்தடுத்த படங்களை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் எஸ் ஜே சூர்யா ‘பொம்மை’ என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படம் ஏஞ்சல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் உருவாகியுள்ளது.

இது ஒரு சைக்கோ திரில்லர் திரைப்படமாகும். இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையாமல் தாமதமானது.

இந்நிலையில் இந்த படம் வரும் ஜூன் 16ஆம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ