டெல்லி மாநிலத்தில் அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பாக, சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (ஜூன் 01) மாலை 05.00 மணிக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழ் சினிமாவின் அசுரக் கூட்டணி… மீண்டும் இணையும் வெற்றிமாறன்- தனுஷ்!
அப்போது, மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்குமாறும், தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறும் கோரியுள்ளார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி மாநில முதலமைச்சருடன் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானும் தமிழக முதலமைச்சரைச் சந்தித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மானுக்கு பொன்னாடை அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது, நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டெல்லி கல்வி அமைச்சர் அடிஷி மர்லினா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, சஞ்சய் சிங், ராகவ் செதா ஆகியோர் உடனிருந்தனர்.
இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய அரசு டெல்லி அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் மூலம் ஆளும் அரசுக்கு தொடர்ந்து தொல்லைகள் தரப்பட்டு வருகின்றன. டெல்லி அரசை சுதந்திரமாக செயல்பட விடாமல் நெருக்கடி கொடுத்து வருகிறது. டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை தி.மு.க. எதிர்க்கும்.
எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர் கூட்டணியின் பொம்மை’… ரிலீஸ் தேதி அப்டேட்!
அகில இந்திய அளவில் இருக்கும் கட்சிகளும் டெல்லி அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும். வரும் ஜூன் 12- ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நான் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியும் வெளிநாட்டில் இருப்பதால் ஜூன் 12- ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் அவரும் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.