Homeசெய்திகள்தமிழ்நாடுமேகதாது விவகாரம்- நம் உரிமையை ஸ்டாலின் விட்டுகொடுத்துவிட்டார்: ஆர்.பி. உதயகுமார்

மேகதாது விவகாரம்- நம் உரிமையை ஸ்டாலின் விட்டுகொடுத்துவிட்டார்: ஆர்.பி. உதயகுமார்

-

- Advertisement -
kadalkanni

மேகதாது விவகாரம்- நம் உரிமையை ஸ்டாலின் விட்டுகொடுத்துவிட்டார்: ஆர்.பி. உதயகுமார்

சிவகுமார் கர்நாடக மக்களுக்காக பேசும்போது, நம் மக்களுக்காக அரசு தரப்பில் பேச யாரும் இல்லையே என்கிற அச்ச உணர்வு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Image

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், “காவிரி உரிமை அதிமுக அரசு இருந்தபோது காப்பாற்றப்பட்டது. அதற்காகவே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை காவிரித்தாய் என்று விவசாயிகள் பாராட்டினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை காவிரி காப்பாளர் என்று பாராட்டினார்கள். காவிரி நீர் 20 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளுக்கு உயிர் ஆதாரமாகவும் உள்ளது. மேகதாது அணையை கட்ட முன்பு கர்நாடக அரசு பல ஆண்டுகள் முயற்சித்தது. அதிமுக ஆட்சியில் அது தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

சிவகுமார் கர்நாடக மக்களுக்காக பேசும்போது, நம் மக்களுக்காக அரசு தரப்பில் பேச யாரும் இல்லையே என்கிற அச்ச உணர்வு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். முதலீடுகள் எதுவும் கொண்டுவரவில்லை. மேகதாது விவகாரத்தில் திமுக அரசு அக்கறையின்றி இருக்கிறது. முதல்வர் பேச மறுக்கிறார். நீர்வளத்துறை அமைச்சர் மழுப்புகிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதை சொன்ன பின்னும், பதவியேற்பு நிகழ்வில் கலந்துக்கொண்டு நம் உரிமையை ஸ்டாலின் விட்டுகொடுத்துள்ளார்” எனக் குற்றஞ்சாட்டினார்.

MUST READ