
தனியாக வாழ்ந்து வந்த பெண் சரமாரியாக அறிவாளால் வெட்டப்பட்டு வீட்டு வாசலில் படுகொலை செய்யப்பட்டு கிடந்திருக்கிறார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் வாலிபர் ஒருவரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் பொன்னம்மாள் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரின் மனைவி சமுத்திரக்கனி. தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகளும் இருந்தனர். கடந்த 14 வருடங்களுக்கு முன்பாக பெருமாள் உயிர் இழந்து விட மகனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடந்த சாலை விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.
48 வயதான சமுத்திரக்கனி தனது இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். முதல் மகளை பொன்னம்மாள் பட்டியிலும், இரண்டாவது மகளை காந்திபுரத்திலும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார் .

இரண்டாவது மகளை திருமணம் செய்து கொடுத்த காந்திபுரத்திலேயே வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்திருக்கிறார் சமுத்திரக்கனி. இந்த நிலையில் இன்று காலையில் வீட்டின் முன்பாக இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சடலமாக கிடந்திருக்கிறார் சமுத்திரக்கனி . அதிகாலையில் பால் கறப்பதற்காக அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு போலீசில் புகார் அளிக்க வருசநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சமுத்திரக்கனியின் கை,, கால் மார்பு என்று சரவணா உடல் முழுவதும் சரமாரியாக அறிவாளால் வெட்டப்பட்டு இருந்தது தெரிய வந்திருக்கிறது.
உயிரிழந்து கிடந்த சமுத்திரக்கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதன் பின்னர் வருசநாடு போலீசார் நடத்தி வந்த முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியில் வசித்து வரும் சொக்கர் என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது அவர் தலைமறைவாகி இருப்பதால் அவரை பிடித்து விசாரிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.