Homeசெய்திகள்இந்தியாஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் உயிர் தப்பினர்

ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் உயிர் தப்பினர்

-

- Advertisement -

ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் உயிர் தப்பினர்

ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் எந்தவித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில் விபத்து- தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு?
Photo: ANI

நேற்று இரவு 07.00 மணியளவில் Up Line தடத்தில் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. Down Line- ல் சென்ற பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரயில் கோரமண்டல் ரயில் மீது மோதியது.

கோரமண்டல் ரயிலின் என்ஜின், 4 பெட்டிகள் கவிழ்ந்தன; 14 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. கோரமண்டல் ரயில் மீது மோதிய ஹவுரா ரயிலின் இரண்டு பெட்டிகள் தடத்தில் இருந்து உருண்டு கவிழ்ந்தன. அத்துடன், மூன்றாவது வழித்தடத்தில் நின்றிருந்த துரந்தோ சரக்கு ரயில் மீதும் பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தாருக்கு ரூபாய் 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு 50000 ரூபாய் நிவாரணம் அறிவித்து மத்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் எவை எவை?
Photo: ANI

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் எந்தவித பாதிப்புமின்றி உயிர் தப்பினர்.தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டி மீது மோதிய பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

MUST READ