நடுரோட்டில் பற்றி எரிந்த பேருந்து
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பாலாநகரில் இருந்து குகட் பள்ளி ஒய் ஜங்ஷன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆரஞ்சு டிராவல் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பெட்ரோல் பங்க் அருகில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்று கொண்டிருந்த பேருந்தில் பெரும் சத்தத்துடன் என்ஜினில் தீப்பிடித்ததால், உஷாரான பேருந்து ஓட்டுனர் பயணிகளை இறக்கிவிட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ மளமளவென பரவியதால் வாகன ஓட்டிகள் பீதியில் ஓடினர்.
விபத்தால் பாலாநகரில் இருந்து வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.