ஒடிஷா மாநிலத்திற்கு சென்றுள்ள தமிழக குழுவினர், அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்தனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ஒடிஷா ரயில் விபத்தில் சிக்கியோரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு அழைத்து வருவதற்காக, தமிழக குழு ஒன்று அந்த மாநிலத்திற்கு விரைந்துள்ளது. தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.சிவசங்கர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குமார் ஜெயந்த், பணீந்திர ரெட்டி, அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்டோர் இந்த குழுவில் உள்ளனர்.
இந்த குழுவினர், புவனேஸ்வரில் ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்துப் பேசினர். மீட்புப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ள ஒடிஷா மாநில அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக அரசின் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்?- ஆ.ராசா
விபத்தில் சிக்கிய தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் ஒடிஷா அரசு முழுமையாக வழங்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் முதலமைச்சர் நவீன் பட்நாயக் உறுதியளித்துள்ளார்.