Homeசெய்திகள்இந்தியாரயில் ஓட்டுநர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை!

ரயில் ஓட்டுநர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை!

-

 

ரயில் ஓட்டுநர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை!
Photo: NDRF

ஒடிஷா மாநிலத்தில் விபத்துக்குள்ளான இரண்டு ரயில்களின் ஓட்டுநர்கள் காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்?- ஆ.ராசா

ஒடிஷா மாநிலத்தில் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 280- க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 700- க்கும் மேற்பட்டோர் கட்டக், பாலசோர், புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் மேற்பார்வையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரதமர் நரேந்திர மோடி, மீட்புப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர், மருத்துவமனைக்கு சென்ற அவர், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, உயரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

உலக நாடுகளின் தலைவர்களும் ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் சார்பிலும், பிரதமர் சார்பிலும், மாநில அரசுகள் சார்பிலும் தனித்தனியே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

இந்த நிலையில், கோரமண்டல் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஓட்டுநர்கள், துணை ஓட்டுநர்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எனினும் விபத்துக்குள்ளான சரக்கு ரயில் ஓட்டுநர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

குணமடைந்த பிறகு ரயில் ஓட்டுநர்களை விசாரணை வளையத்திற்குக் கொண்டு வர ரயில்வே காவல்துறை திட்டமிட்டுள்ளது.

MUST READ