ஒடிஷாவில் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கிய சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறுகையில், “லால்பகதூர் சாஸ்திரி மத்திய ரயில்வேத்துறை அமைச்சராக இருந்த போது, நிகழ்ந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகினார். எனவே, இதனை எடுத்துக்காட்டாக கருதி, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பதவியை அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதே கருத்தினை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல், உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் மத்திய ரயில்வேத்துறை அமைச்சரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்?- ஆ.ராசா
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஒடிஷா ரயில் விபத்து சம்பவம் அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல, சீரமைப்புப் பணிகளை முடிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.