Homeசெய்திகள்தமிழ்நாடுரயில் விபத்தில் சிக்கியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை!

ரயில் விபத்தில் சிக்கியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை!

-

 

ரயில் விபத்தில் சிக்கியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை!
Photo: TN Govt

ஒடிஷா ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 137 பேர் சிறப்பு ரயில் மூலம் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையத்திற்கு இன்று (ஜூன் 04) காலை 07.00 மணி வந்தடைந்தனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆகியோர் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு வந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டப் பயணிகளுக்கு தேவையான மருத்துவ முதலுதவி அளித்து, தேவைப்படுகிறவர்களுக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிகழ்வின் போது, வருவாய் நிர்வாக ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ரயில் ஓட்டுநர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை விமான நிலையத்திலும் மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளது. சிகிச்சைத் தேவைப்படுவோருக்கு தமிழகத்தைப் போல் ஒடிஷாவிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ