Homeசெய்திகள்இந்தியாபிரதமர் நரேந்திர மோடியுடன் ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பேச்சு!

-

 

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பேச்சு!
File Photo

ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே ரயில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அந்த பகுதியில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேற்பார்வையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

ரயில் விபத்தில் சிக்கியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை!

இந்த நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை இன்று (ஜூன் 04) மதியம் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விபத்து மீட்புப் பணிகள், தண்டவாளச் சீரமைப்புப் பணிகள் உள்ளிட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து, ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்புக்கு கொண்டுப் பேசினார். அப்போது தற்போதைய மீட்புப் பணி, காயமடைந்தோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.

எந்த ஒரு உதவியும் வழங்க தயாராக இருப்பதாக முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிடம் உறுதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, ரயில் விபத்தில் மீட்புப் பணி தொடர்பாக ஒடிஷா மாநில அரசின் நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

“ரயில் தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட சம்பவம்”- காவல்துறையினர் தீவிர விசாரணை!

மேலும், நெருக்கடியான நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒடிஷா மக்களுக்கு பிரதமர் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.

MUST READ