Homeசெய்திகள்இந்தியா"ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?"- அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஒடிஷா அரசு!

“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?”- அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஒடிஷா அரசு!

-

 

"ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?"- அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஒடிஷா அரசு!
Photo: ANI

ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட விபத்தில் 275 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ஒடிஷா மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“ரயில் தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட சம்பவம்”- காவல்துறையினர் தீவிர விசாரணை!

இது தொடர்பாக, ஒடிஷா மாநில அரசின் தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ஒடிஷா ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழக்கவில்லை; 275 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். சில உடல்களை இருமுறை எண்ணப்பட்டதால் 288 என தவறான எண்ணிக்கை பதிவாகியுள்ளது. உயிரிழந்த 275 பேரில் 88 உடல்களை மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 1,175 பேரில் தற்போது வரை 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்தது தமிழக குழு!

இதனிடையே, ரயில் விபத்து நடந்த இடத்தில் இரண்டாவது நாளாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ