களக்காடு முண்டந்துறை சரணாலயம் செல்லும் அரிசி கொம்பன்
அரிசி கொம்பன் யானை பிடிக்கப்பட்டு களக்காடு முண்டந்துறை சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
கேரளா மாநிலம் மூணாறு சின்ன கானல் பகுதியில் பிடிக்கப்பட்ட அரிசி கொம்பன் யானையானது, தேக்கடி புலிகள் சரணாலயம் பகுதியில் கடந்த ஏப்ரம் 29 ஆம் தேதி விடப்பட்டது. கேரள மாநிலம் வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானையானது நான்கு நாட்களில் தமிழக வன பகுதிக்குள் நுழைந்து மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு போன்ற மலை கிராமங்களில் உலாவி வந்தது. அதனைத் தொடர்ந்து மே 26-ஆம் தேதி கூடலூர் வந்தது. பின்னர் மே 27 கம்பம் நகரில் நுழைந்து மக்கள் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்தது. கம்பம் நகருக்குள் புகுந்த யானையால் இருசக்கர வாகனங்கள் தகர்க்கப்பட்டன, ஒருவர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி கம்பத்திலிருந்து கிளம்பிய அரிசி கம்பன் யானை சுருளி வனப்பகுதியிக்கு சென்றது. யானை கஜம், கூச்சநாச்சி அம்மன் கோவில் வழியாக காமயகவுண்டன் பட்டியல் உள்ள சண்முக நதி அணைப்பகுதியில் உள்ள சண்முகநாதன் கோவில் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தது. கடந்த ஆறு தினங்களாக சண்முகநாதன் கோவில் வனப்பகுதியிலும் முகாமிட்டு இருந்த யானை, சின்ன ஓவலாபுரம் வனப்பகுதிக்கு செல்வதும் மீண்டும் சண்முகநதி அணைக்கு வருவதுமாக இருந்தது.
இந்த நிலையில யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த வனத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் நேற்று நள்ளிரவு சின்ன ஒவலாபுர வனப்பகுதியில் யானையை கண்டனர். பின்னர் இரவு 11 மணிக்கு யானைக்கு மயக்கம் ஊசி செலுத்தினர். நள்ளிரவு 3 மணிக்கு மயக்கம் அடைந்த யானையை கண்ட வனத்துறையினர், முத்து, உதயா, சுயம்பு ஆகிய கும்கி யானைகள் உதவியுடன் யனையை லாரியில் ஏற்றினர். அதனை தொடந்து பிடிபட்ட அரிசி கொம்பன் யானை, களக்காடு முண்டந்துறை சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.