பீர் வேன் கவிழ்ந்து விபத்து- பீரை அள்ளிச்சென்ற மதுப்பிரியர்கள்
ஆந்திர மாநிலம் அனக்காபள்ளியில் பீர் ஏற்றி சென்ற சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மதுபான குடோனில் இருந்து நரசிப்பட்டினத்திற்கு பீர் லோடு ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கசீம்கோட்ட மண்டலம் பையவரம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது குறுக்கே இருசக்கர வாகனம் வந்ததால் டிரைவர் மோதாமல் இருக்க முயன்று சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மினி லாரி கவிழ்ந்து சாலையில் சிதறிய பீர் பாட்டில்கள்.. போட்டி போட்டு அள்ளிய குடிமக்கள்#lorryaccident #beer #News18TamilNadu pic.twitter.com/ZX8L9JSGJ3
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 6, 2023
இதில் வேனில் இருந்த நூற்றுக்கணக்கான பீர் பாட்டில்கள் சாலை கொட்டியது. இதனால் டிரைவர் கவலையில் இருந்த நிலையில் இதனை கவனித்த மதுபிரியர்கள் உடைந்துள்ள பீர் பாட்டில் காலில் குத்தி கொள்ளுமோ என்று கூட பார்க்காமல் கிடைத்த வரை லாபம் என ஒருவருக்கு எத்தனை பாட்டில் முடியுமோ அத்தனை உடையாத பீர் பாட்டில்களை போட்டி போட்டு கொண்டு எடுத்து சென்றனர்.