Homeசெய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து விதிமுறைகளை மீறிய 20,668 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 20,668 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

-

- Advertisement -

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 20,668 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 20, 668 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Erratic drivers feel the pinch as traffic police levy revised fine in  Chennai - The Hindu

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வரவேற்றார். கூட்டத்துக்கு அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் பிரதீப்யாதவ் தலைமை தாங்கினார். சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். மேலும் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சாலை விபத்துகளை குறைப்பது குறித்து பேசினர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இருக்கிற 38 மாவட்டங்களில் விபத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது 19-வது மாவட்டமாக கடலூர் மாவட்டத்தை ஆய்வு செய்கிறோம். இந்த மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அதிகமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் விபத்தை குறைப்பதில் கடலூர் மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 13 சதவீதத்தை கொண்டு சென்னையும், 2-வது 14 சதவீதத்தில் மயிலாடுதுறை மாவட்டம் உள்ளது. 19 சதவீதத்தில் 3-வது இடத்தில் கடலூர் மாவட்டம் உள்ளது.

Minister EV Velu promises measures to shut 32 toll plazas in Tamil Nadu |  Chennai News, The Indian Express

தமிழகத்தில் செல்போன் பேசிய படி வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 20,668 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்துள்ளோம். கடலூர் மாவட்டத்தில் 1085 விபத்துகள் நடந்துள்ளது. 204 பேர் உயிரிழந்துள்ளனர். வருங்காலங்களில் விபத்து இல்லாத மாவட்டமாக மாற போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய வேண்டும் என்று 7 முறை மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். 7 மீட்டர் மாநில நெடுஞ்சாலையை இருபுறமும் தலா 1½ மீட்டர் அகலப்படுத்தி 10 மீட்டர் சாலையாக மாற்றி கையகப்படுத்தி, புதிதாக 14 சுங்கச்சாவடிகளை மத்திய அரசு அமைத்து இருக்கிறது. இது தவறு என்று வலியுறுத்தி வருகிறோம். இருந்தாலும் சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றார்.

MUST READ