spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிமனிதநேயத்துடன் பசுவை காப்பாற்றிய பால்வளத்துறை அமைச்சர் நாசர்

மனிதநேயத்துடன் பசுவை காப்பாற்றிய பால்வளத்துறை அமைச்சர் நாசர்

-

- Advertisement -
kadalkanni

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (19/12/2022) காலை 6:30 மணிக்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  சா.மு. நாசர் அவர்கள் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில் திடீர் ஆய்வு செய்தார். துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்து, அங்கு தேங்கி இருந்த குப்பைகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அமைச்சர் நடத்திய இந்த ஆய்வின் போது நோய்வாய்ப்பட்டு சாலையில் துடித்துக் கொண்டிருந்த பசுமாட்டை அவர் கவனித்தார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் இன்று அவர் செல்லும் வழியில் திருமுல்லைவாயில் அருகே ஒரு பசுமாடு உடல் நலம் பாதிக்கப்பட்டு சாலையில் துடித்துக் கொண்டிருந்த நிலையில், அதை கண்ட அமைச்சர் அவர்கள் உடனடியாக தன் காரை நிறுத்தி அங்கு இறங்கி சென்று அந்த பசுவிற்கு உடனடியாக சிகிச்சை வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

உடனடியாக அந்த பசு மாடு ஆவடியில் இருக்கக்கூடிய கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாயில்லா ஜீவனுக்கு மனிதநேயத்துடன் செயல்பட்டார் அமைச்சர் நாசர். இதற்கு அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

MUST READ