ஐ.சி.சி.யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஜூன் 07) பிற்பகல் 03.00 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது: டிடிவி தினகரன்
அதைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 146 ரன்களும், ஸ்மித் 95 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தரப்பில், முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
விரைவில் மதுரையில் மாநாடு! விஜய் அழைக்கிறார்
ஓவல் மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகப் பார்க்கப்படும் நிலையில், வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.