சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இன்று (ஜூன் 08) காலை 10.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு பொன்னாடைப் போர்த்தி வரவேற்ற முதலமைச்சர், நினைவுப் பரிசாக தமிழகம் குறித்த சிறப்பு அடங்கிய புத்தகத்தை வழங்கினார்.
‘சாதிய ரீதியில் பேசி துன்புறுத்தல்’ ககன் தீப் சிங் பேடி மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
இந்த நிகழ்வின் போது, தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.