விக்ரம், தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். கடைசியாக மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலனாக வெறித்தனம் செய்தார். தற்போது பா ரஞ்சித் இயக்கும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.
விக்ரம் கடந்த 2017 ஆம் ஆண்டுகௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்தார். ஆனால் தற்போது வரை அந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து எந்தத் தகவலும் இல்லை. படம் வெளியாவதில் பல சிக்கல்கள் நிலவி வருகின்றன.
இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ரிது வர்மா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் விக்ரம் துருவா, ஜோஸ்வா, ஜான் போன்ற மூன்று வேடங்களில் நடித்திருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த படம் வருகின்ற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர், வருகின்ற ஜூன் 17ஆம் தேதி மலேசியாவில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் இரண்டு பாடல்களும் அந்நிகழ்ச்சியில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.