அரசுமுறைப் பயணமாக செர்பியா சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இந்தி திரைப்படப் பிரபலங்களான வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.
“அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
‘சிட்டாடல் இந்தியா’ (Citadel India) திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அந்த திரைப்படக் குழுவினர் செர்பியா சென்றுள்ளனர். அங்கு பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் திரைப்படக் குழுவினர். இந்த நிலையில், செர்பியாவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருப்பதை அறிந்த திரைப்படக் குழுவினர், அவரைச் சந்திக்க அதிகாரிகளிடம் அனுமதி கோரினர்.
அனுமதி மற்றும் நேரம் கிடைத்ததைத் தொடர்ந்து, வருண் தவான், சமந்தா மற்றும் திரைப்பட இயக்குநர் உள்ளிட்டோர் இந்திய குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்துப் பேசினர். பின்னர், அனைவரும் குடியரசுத் தலைவருடன் குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
ஓபிஎஸ் எப்படி நிவாரணம் கோர முடியும்?: ஈபிஎஸ் தரப்பு
இந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ள நடிகர் வருண் தவான், “குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியையும், கௌரவத்தையும் தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.