Homeசெய்திகள்தமிழ்நாடுவாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

-

வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கவுள்ள நிலையில், வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Image

தஞ்சை டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் 12-ம் தேதி திறக்க உள்ளது. கல்லணையிலிருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல 90 கோடி ரூபாய் செலவில் பாசன ஆறுகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

MKS

குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் முதலை முத்துவாரி வடிகால் தூர்வாரும் பணி, தஞ்சை ஆலக்குடி பகுதியில் நீர்வழித் தடங்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர், விண்ணமங்கலம் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், விவசாயிகளிடம் தூர்வாரும் பணிகள் குறித்து உரையாற்றினார். முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர் கே.பன்னீர்செல்வம், கே.என் நேரு , அன்பில் மகேஸ் உள்ளிட்டோரும், நீர்வளத்துறை பொறியாளர்கள், வேளாண்துறை அலுவலர்களும் ஆய்வு செய்துவருகின்றனர்.

MUST READ