ஒடிசாவில் துர்க் – பூரி விரைவு ரயிலில் உள்ள ஏசி பெட்டியில் திடீர் தீ விபத்து
ஒடிசாவில் துர்க்- பூரி விரைவு ரயிலில் உள்ளா ஏசி பெட்டியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
ஜூன் 2 ஆம் தேதி ஒடிசாவின் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதியதில் குறைந்தது 275 உயிர்கள் பலியாகின மற்றும் 1000 க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் ‘சிக்னல் குறுக்கீடு’ காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே கூறியது. அந்த வடு மறைவதற்குள், மத்திய பிரதேசம், அசாம் என அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் ஒடிசாவில் துர்க்- பூரி விரைவு ரயிலில் உள்ளா ஏசி பெட்டியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த சமப்வத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வியாழக்கிழமை மாலை காரியார் சாலை நிலையத்தை வந்தடைந்தபோது ரயிலின் பி3 பெட்டியில் இருந்து புகை வெளிவருவது கண்டறியப்பட்டது. இதனை கண்ட பயணிகள் சிலர் பீதியில், ரயிலில் இருந்து வெளியேறினர்.
ரயில்வே அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்குள் பிரச்சனையை சரிசெய்ததை அடுத்து, இரவு 11 மணிக்கு நுவாபாடா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. உராய்வு மற்றும் பிரேக் முழுமையடையாததால் பிரேக் பேட்கள் தீப்பிடித்ததாகவும், வேறு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.