Homeசெய்திகள்தமிழ்நாடுரோஜா நலமுடன் உள்ளார்! அப்பல்லோவில் தொடர் சிகிச்சை

ரோஜா நலமுடன் உள்ளார்! அப்பல்லோவில் தொடர் சிகிச்சை

-

ரோஜா நலமுடன் உள்ளார்! அப்பல்லோவில் தொடர் சிகிச்சை
ரோஜா

பிரபல நடிகையும், ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் உள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரோஜா, செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார் . அப்படத்தின் இயக்குநர் ஆர். கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

ரோஜா நலமுடன் உள்ளார்! அப்பல்லோவில் தொடர் சிகிச்சை
ரோஜா செல்வமணி

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் பல வருடங்கள் முன்னணி நடிகையாக அசத்தி வந்த நடிகை ரோஜா, ஆந்திர மாநிலத்தின் அரசியல் களம் இறங்கி அதிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார்.

ஒ. எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ரோஜா, ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வென்றார். இதை அடுத்து ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

ரோஜா நலமுடன் உள்ளார்! அப்பல்லோவில் தொடர் சிகிச்சை
ரோஜா குடும்பம்

சென்னை விருகம்பாக்கத்தில் நடிகை ரோஜாவின் வீடு உள்ளது. நேற்று இரவு இவரின் கால் வீக்கம் அதிகமாகி இருக்கிறது. இதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவே அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்பல்லோ மருத்துவமனையில் ரோஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமுடன் உள்ளார்.

MUST READ