உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், வெற்றி பெற்று கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி.
மணிப்பூர் கலவரம்- இரு மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை!
இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி.
ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களையும், இந்திய அணி 296 ரன்களையும் எடுத்துள்ளது. அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 270 ரன்களையும், இந்திய அணி 234 ரன்களையும் எடுத்துள்ளது.
இதனால் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக, முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது. அத்துடன், 50 ஓவர், டி20, டெஸ்ட் என மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் உலக சாம்பியன் பட்டம் வென்று ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்துள்ளது.