ஐ.சி.சி.யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சுனைனாவின் ரெஜினா படத்தின் ரிலீஸ் அப்டேட்!
இது குறித்து இந்திய கிரிக்கெட் வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது ஏமாற்றத்தை அளிக்கிறது. அனைத்து குழப்பங்கள், மதிப்பீடுகளுக்கு மத்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உறுதுணையாக நின்ற சக வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பது மிகவும் முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி!
டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 13 போட்டிகளில் விளையாடி, 61 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினை, ஆடுகளத்தின் தன்மையைக் காரணம் காட்டி, இறுதிப் போட்டியில் அணி நிர்வாகம் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.