Homeசெய்திகள்தமிழ்நாடுகாவிரி நீரை மலர்தூவி வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

காவிரி நீரை மலர்தூவி வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

காவிரி நீரை மலர்தூவி வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN Govt

டெல்டா மாவட்டங்களுக்கு குறுவைச் சாகுபடிக்காக, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) காலை 10.00 மணிக்கு தண்ணீரைத் திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அணையில் வலது கரையில் உள்ள மதகுகளை மின் விசையால் இயக்கி முதலமைச்சர் தண்ணீரைத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, பாய்ந்த காவிரி நீரை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி வரவேற்றனர்.

ஜெயலலிதா ஊழல்வாதி- அண்ணாமலை பரபரப்பு பேட்டி

90 ஆவது ஆண்டாக ஜூன் 12- ஆம் தேதி குறுவைச் சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பால், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாசன் வசதிப் பெறும். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் சுமார் 17.32 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன் வசதிப் பெறும்.

முதற்கட்டமாக, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவைப் படிப்படியாக அதிகரித்து விநாடிக்கு 10,000 கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் மூன்று நாட்களில் கல்லணையை சென்றடையும்.

“மாணவர்களின் நலனே முக்கியம்”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!

அடுத்தாண்டு ஜனவரி 28- ஆம் தேதி வரை குறுவை, சம்பா, தாளடிப் பயிர் பாசனத்திற்கு 220 நாட்களுக்கு 330 டி.எம்.சி. நீர் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ