
வரும் ஜூன் 21- ஆம் தேதி அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். அங்கு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளது.
லாரியின் பின்னால் மோதிய கார்- 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி
அந்த கூட்டத்தில், இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவுகளை மேம்படுத்துவது, புதிய தொழில் நுட்பங்கள், சர்வதேச பொருளாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்திய பிரதமருக்கு அமெரிக்க அதிபர் விருந்தளிக்கவுள்ளார்.

முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்திக்கும் பிரதமர், அமெரிக்கா வாழ் இந்தியர்களையும் சந்திக்கவுள்ளார்.
கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்!
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையையொட்டி, நியூஜெர்சி நகரில் உணவகம் நடத்தி வரும் குல்கர்னி என்பவர், ‘மோடி ஜி தாளி’ என்ற பெயரில் உணவு வகையை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்திய தேசிய கொடி வண்ணத்தில் இட்லி உள்ளிட்ட இந்திய உணவு வகைகள் இடம் பெற்றிருந்தனர்.