Homeசெய்திகள்தமிழ்நாடுதேசிய மருத்துவ தகுதி தேர்வை கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

தேசிய மருத்துவ தகுதி தேர்வை கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

-

தேசிய மருத்துவ தகுதி தேர்வை கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

NExT என்ற தேசிய மருத்துவ தகுதித்தேர்வை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!
Photo: CM MKStalin

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள NExT என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று (13-6-2023) கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், NEXT தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், NEXT தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ