Homeசெய்திகள்சினிமாநிகழ்ச்சியில் சேர்ந்து கலந்துகொண்ட கமல்- எச்.வினோத்… அப்போ அடுத்த படம் கன்ஃபார்ம்!

நிகழ்ச்சியில் சேர்ந்து கலந்துகொண்ட கமல்- எச்.வினோத்… அப்போ அடுத்த படம் கன்ஃபார்ம்!

-

நடிகர் கமல்ஹாசனின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.

இதற்கிடையில் கமல் தனது 233 வது படத்தை எச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இது சம்பந்தமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில், இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் தலைமையில் , கமல் மற்றும் ஹெச் வினோத் உள்ளிட்ட பலர் பாரம்பரிய நெல் பாதுகாப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன் மூலம் ‘ KH233’ படமானது விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் அவர்களின் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல சமூக கருத்துக்களை கூறும் படமாகவும் அமையும் என்று கூறப்படுகிறது.

எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ