சில வகை வழக்குகளை விசாரிக்க மத்திய புலனாய்வுத்துறையான சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
“செந்தில் பாலாஜி பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
மத்திய புலனாய்வுத்துறை எந்தவொரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியை பெற வேண்டும். கடந்த 1989- ஆம் ஆண்டு, 1992- ஆம் ஆண்டுகளில் சில வகை வழக்குகளை விசாரிக்க வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை தமிழக அரசுத் திரும்பப் பெற்று உத்தரவிட்டுள்ளது.
மத்திய புலனாய்வுத்துறை தமிழகத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழக அரசின் முன் அனுமதியைப் பெற்று விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி தொடர்பான மூன்று மனுக்கள் மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு!
இதேபோன்ற உத்தரவை ஏற்கனவே, மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை அனுமதி இல்லாமல் சோதனை நடத்தியதன் காரணமாகவே, தற்போது சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்ட முன் அனுமதி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.