பொருளாதார குற்ற வழக்குகள், சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் 2022- ஆம் ஆண்டு வரை அமலாக்கத்துறை சுமார் 3,010 வழக்குகள் விசாரித்துள்ளது. இதுவே, கடந்த 2004- ஆம் ஆண்டு முதல் 2014- ஆம் ஆண்டு வரை அமலாக்கத்துறை 112 வழக்குகளை விசாரித்துள்ளது.
இது 27 மடங்கு அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த 2022- ஆம் ஆண்டு மார்ச் 31- ஆம் தேதி வரை அமலாக்கத்துறையின் விசாரணையில் கீழ் உள்ள வழக்குகள் தொடர்பாக, சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதில், வங்கி மோசடி, போன்சி வழக்குகள் தொடர்பாக மட்டும் 57,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, அமலாக்கத்துறையால் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை விற்றதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு சுமார் 23,000 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் முடக்கப்படும் சொத்துகளை ஆறு மாதங்கள் மட்டுமே அமலாக்கத்துறை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை…. மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
எந்தக் குற்றத்துக்காக சொத்துகள் முடக்கப்பட்டன என்பதை ஆறு மாதங்களில் அமலாக்கத்துறை நிரூபிக்க வேண்டும். அப்படி, நிரூபிக்க முடியாத பட்சத்தில் அமலாக்கத்துறையின் பிடியில் இருந்து சொத்துகள் விடுவிக்கப்படும். சம்மந்தப்பட்ட நபர், தேசிய தீர்ப்பாயத்தில் மனு அளித்து, சொத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
அதே நேரம், நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், முடக்கப்பட்ட சொத்துகளை அமலாக்கத்துறை மத்திய அரசிடம் ஒப்படைத்துவிடும்.