Homeசெய்திகள்சினிமாவிஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம்.........மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி!

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம்………மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி!

-

விஜய் தேவரகொண்டா தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.

விஜய் தேவரகொண்டா,தற்போது நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி எனும்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சிவா நிர்வனா இயக்குகிறார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் குறி விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் த்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா நடிப்பில் ‘கீதா கோவிந்தம்’ என்னும் திரைப்படம் வெளியாகி மெகா ஹிட் ஆனது.

இந்த படத்தை இயக்குனர் பரசுராம் பெட்லா இயக்கியிருந்தார்.
தற்போது மீண்டும் விஜய் தேவரகொண்டா பரசுராம் பெட்லா கூட்டணி நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைய உள்ளது. இந்த புதிய படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் இதன் கூடுதல் தகவலாக, விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக சீதாராமம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை மிர்ணாள் தாகூர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

‘சீதாராமம்’ திரைப்படத்தில் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ