spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசொன்னபடி அனுமனுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள்... ஆதிபுருஷ் பட சுவாரசியம்!

சொன்னபடி அனுமனுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள்… ஆதிபுருஷ் பட சுவாரசியம்!

-

- Advertisement -
kadalkanni

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.

ராமாயண கதையை தழுவி உருவாக்கப்பட்ட இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சைஃப் அலிக்கான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.

டி சீரிஸ் நிறுவனம் மற்றும் ரெட்ரோபைல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்தப் படம் 2D மற்றும் 3D வடிவங்களில் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில் ஆதி புரூஸ் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் அனுமனுக்காக ஒரு சீட் ஒதுக்கப்பட வேண்டும் என்று படத்தின் இயக்குனரான ஓம்ராவத் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதற்கான காரணத்தை கேட்ட பொழுது சிறு வயதில் இருந்தே அவரது தாயார் ராமாயண நாடகம் எங்கு நடைபெற்றாலும் அதைக் காண அனுமன் அங்கே வருவார் என்று கூறியதாகவும் அதுபோல தன்னுடைய இயக்கத்தில் வெளிவரும் ஆதிபுருஷ் திரைப்படத்தை காண்பதற்கும் அனுமன் வருவார் என்ற நம்பிக்கையில் அவர் இந்த கோரிக்கையை வைத்திருப்பதாக கூறியிருந்தார். அதன்படி ஐநாக்ஸ், பி வி ஆர் உள்ளிட்ட சில திரையரங்குகளில் அனுமனுக்காக சீட்டு ஒன்றை ஒதுக்கியுள்ளனர்.

MUST READ