Homeசெய்திகள்தமிழ்நாடுநாடாளுமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி சாத்தியமல்ல: கே.எஸ்.அழகிரி

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி சாத்தியமல்ல: கே.எஸ்.அழகிரி

-

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி சாத்தியமல்ல: கே.எஸ்.அழகிரி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி என்பதே நடைமுறை சாத்தியமல்ல என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் அழகிரி விமர்சித்துள்ளார்.

ks alagiri

ராகுல்காந்தி பிற்ந்த நாளை முன்னிட்டு பூவிருந்தவல்லியில் பாரதபூமி கலைகுழு சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை விசாரணை செய்ததற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்பவர்கள் பாஜக எம்பி மீது மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் சட்டப் பாதுகாப்பு வழங்குகிறது.

ks alagiri

மதியில்லாத மோடி அரசுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் சட்டத்தின் மீது நம்பிக்கையில்லை. ஜெயலலிதா குறித்து தமிழ் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருக்கும் நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி என்பது நடைமுறை சாத்தியமில்லை. பல்வேறு காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியை ஏற்று கொண்டாலும் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரை விமர்சித்த பாஜக உடனான கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்வே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி நடைமுறை சாத்தியமற்றது” என்றார்

MUST READ