Homeசெய்திகள்க்ரைம்தூத்துக்குடியில் பைப்புகளை திருடிய 10 பேர் கைது

தூத்துக்குடியில் பைப்புகளை திருடிய 10 பேர் கைது

-

தூத்துக்குடியில் பைப்புகளை திருடிய 10 பேர் கைது

தமிழக மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல்மின் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள குப்ரோ நிக்கல் பைப்புகளை திருடியது தொடர்பாக 10 பேரை கைது செய்து தெர்மல் நகர் காவல் துறையினர் விசாரணை.

தூத்துக்குடியில் பைப்புகளை திருடிய 10 பேர் கைது
10 பேர் கைது

தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசுக்கு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் கடந்த பத்தாம் தேதி ஒரு கும்பல் கடல் பகுதி வழியாக வந்து பொருள் வைப்பு அறையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 690 கிலோ குப்ரோ நிக்கல் பைப் உள்ளிட்ட உதிரிப் பாகங்களை திருடிச் சென்றது. இதுத் தொடர்பாக அனல்மின் நிலைய ஊழியர்கள் நான்கு பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.  இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த திருட்டு தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு திருட்டு கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.

தூத்துக்குடியில் பைப்புகளை திருடிய 10 பேர் கைது
பைப்புகளை திருடிய நபர் கைது

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த திருட்டில் ஈடுபட்ட ராமநாதபுரம், தூத்துக்குடி, முத்தையாபுரம்,  தெர்மல் நகர், பெரியசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஜெய பிரேம்,  மாசான முத்து, மதன், பிரகாஷ், சுப்பிரமணி, குழந்தை பாண்டி, கணேசமூர்த்தி, அழகர், சந்தனராஜ் ,மாரிமுத்து உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எவ்வாறு இந்த கடத்தலில் ஈடுபட்டனர் வேறு யாருக்கும் இந்த கடத்தலில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ