Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவு? கோபத்தில் அமலாக்கத்துறை

செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவு? கோபத்தில் அமலாக்கத்துறை

-

செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவு? கோபத்தில் அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை விசாரணைக்கு செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் ஆஜராகவில்லை என தெரிகிறது.

2வது முறை சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை: ஆஜராகாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி- சிக்கலில் அசோக்

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் என்பவரது வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த 13 ஆம் தேதி காலை 09.00 மணி முதல் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர். மேலும், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். 17 மணி நேர சோதனைக்கு பிறகு நள்ளிரவில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில் சோதனையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில்,
இன்று காலை 10 மணிக்கு சென்னை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் இன்று ஆஜராகவில்லை. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தரப்பில் கால அவகாசம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள அசோக் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது

MUST READ