Homeசெய்திகள்உலகம்"பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன் நான்"- எலான் மஸ்க் பேட்டி!

“பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன் நான்”- எலான் மஸ்க் பேட்டி!

-

- Advertisement -

 

"பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன் நான்"- எலான் மஸ்க் பேட்டி!
Photo: PMO India

அரசுமுறைப் பயணமாக, அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மணிப்பூர் கலவரம்- எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதன் பின், நியூயார்க்கில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் உலகின் பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க், விண்வெளி விஞ்ஞானி உள்ளிட்டோரைப் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்திய அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் எலான் மஸ்க், “பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன் நான்; அவருடனான சந்திப்பு சிறப்பானதாக இருந்தது. இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். இந்தியாவில் ஸ்டார்லின்க் இணைய சேவையைக் கொண்டு வர விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்!

இதைத் தொடர்ந்து நாளை சர்வதேச யோகா தினத்தையொட்டி, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

ஐ.நா. உயரதிகாரிகள், பிரபலங்கள், பல்வேறு நாடுகளின் தூதரர்கள் உள்ளிட்டோர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். ஜூன் 22- ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்திய பிரதமர், பின்னர், வெள்ளை மாளிகையில் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றவிருக்கிறார்.

முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையும், அமெரிக்க வாழ் இந்தியர்களையும் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

MUST READ