Homeசெய்திகள்தமிழ்நாடுமயக்க நிலையில் செந்தில் பாலாஜி! அறுவை சிகிச்சை நிறைவு

மயக்க நிலையில் செந்தில் பாலாஜி! அறுவை சிகிச்சை நிறைவு

-

- Advertisement -

மயக்க நிலையில் செந்தில் பாலாஜி! அறுவை சிகிச்சை நிறைவு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் 5 மணிநேரமாக நீடித்த பைபாஸ் அறுவை சிகிச்சை நிறைவடைந்தது.

senthilbalaji

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு இதயத்தில் மூன்று நாளங்களில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அமைச்சருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சையை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைச் செய்தனர்.

senthil bal

இதையடுத்து செந்தில்பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று, சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று (ஜூன் 21) காலை 05.15 மணிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சைத் தொடங்கியது. மருத்துவர் ரகுராம் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினரால் 5 மணி நேரமாக மேற்கொள்ளபட்ட அறுவை சிகிச்சை நிறைவுபெற்ற நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது செந்தில்பாலாஜி வார்டுக்கு மாற்றப்பட்டார். தற்போது செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக சென்னை காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

MUST READ