பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படவுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை வாரச் சந்தையில் மூன்று மணி நேரத்தில் நான்கு கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் நடைபெற்று வரும் புதன்கிழமை வாரச்சந்தைக்கு காட்டுச்செல்லூர், குறும்பூர், கிளியூர், மடப்பட்டு, சேந்தநாடு, ஆசனூர் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன.
வரும் ஜூன் 29- ஆம் தேதி அன்று தமிழகத்தில் பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படவுள்ள நிலையில், வழக்கத்தை விட அதிகளவு வியாபாரிகள் சந்தையில் குவிந்தனர். கடந்த வாரம் வரை அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று வந்த சந்தையில் இன்று (ஜூன் 21) ஒரே நாளில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்கப்பட்டுள்ளன.
மணிப்பூர் கலவரம்- எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்!
அதிகாலை 05.00 மணி முதலே ஆடுகளின் விற்பனை மும்முராக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.