அனிமல் பட சூட்டிங் நிறைவடைந்தது குறித்து நடிகை ராஷ்மிகா உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ரன்பீர் கபூருடன், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.
டி சீரிஸ் நிறுவனம் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகாவின் படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து ராஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில் “அனிமல் படத்தில் எனது காட்சிகளை முடித்துவிட்டு ஹைதராபாத்திற்கு திரும்பி உள்ளேன். இந்த படத்தில் நடித்தது தொடர்பான அளவில்லாத மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். 50 நாட்கள் அனிமல் படப்பிடிப்பில் இருந்துள்ளேன். அது ஒரு மறக்க முடியாத அனுபவம். இப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவரும் தேர்ந்த கலைஞர்கள். இந்தப் படக்குழுவுடன் இன்னும் 1000 முறை பணியாற்ற விரும்புகிறேன். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஏதோ மாதிரியான ஒரு வெற்றிடத்தை உணர்கிறேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.