
அமெரிக்காவில் நியூயார்க் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் சென்றடைந்தார்.
கால்வாயில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்!
வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ருஸ் விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரின் வருகையைக் குறிக்கும் வகையில் இருநாட்டு தேசிய கீதங்கள் விமான நிலையத்தில் இசைக்கப்பட்டன. அங்கு வரவேற்பு அளித்த இரண்டு சிறு குழந்தைகளிடம் இருந்து ஒரு பூங்கொத்தை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, காரில் வெள்ளை மாளிகைக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், இருதரப்பு ஒத்துழைப்பு, பொருளாதாரம், வர்த்தகம், பருவநிலை மாற்றம், புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவைக் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
பின்னர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மைசூர் சந்தனத்தால் உருவாக்கப்பட்ட சந்தனப்பெட்டியை அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி நினைவுப் பரிசாக வழங்கினார். அந்த சந்தனப்பெட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எள் இடம்பெற்றது. மேலும், உபநிஷத் ஆங்கில மொழியாக்கப் புத்தகத்தையும் பிரதமர் வழங்கியுள்ளார்.
மூடப்படும் 500 மதுக்கடைகள் எவை?- விரிவாகப் பார்ப்போம்!
அதேபோல், 7.5 கேரட் வைரக்கல் ஒன்றை அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அன்பளிப்பாக வழங்கினார்.
இதனிடையே, பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர்.