செந்தில் பாலாஜிக்கு எதிராக முன்னாள் அதிமுக எம்பி வழக்கு
செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சராக செந்தில்பாலாஜி தொடருவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் சார்பில் வழக்கறிஞர் இன்பதுறை ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இலாகா மாற்றத்திற்குப் பிறகு செந்தில்பாலாஜியை அமைச்சராக ஆளுநர் அங்கீகரிக்கவில்லை, செந்தில்பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன, செந்தில்பாலாஜி அமைச்சராக இருப்பதால், நீதிமன்றக் காவலில் இருக்கும்போது ரகசிய கோப்புகளை அணுக இயலும். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக ஆளுநரின் ஒப்புதலை மீறி, அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக, தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ச.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் பிரித்து வழங்கியதுடன் வி.செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது.