
அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு ஒத்துழைப்பு, புதிய தொழில்நுட்பங்கள், வர்த்தகம், வெளியுறவுக் கொள்கைகள், விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்டவைக் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
எழுத்தாளர்கள் உதயசங்கர், ராம் தங்கம் ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு!
அதைத் தொடர்ந்து, வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா வாழ் இந்தியர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, “அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும். மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும். இந்தியாவின் 100- க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்களைத் திரும்ப ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
பழங்காலப் பொருட்களைத் திரும்ப ஒப்படைக்கும் அமெரிக்க அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்களுக்கு பணிக்காக வழங்கப்படும் H1B விசாவை இனி அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம். அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் வசதிக்காக H1B விசாவை அஙகேயே புதுப்பிக்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவை ஜோ பைடன் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முயல்கிறார். பெங்களூரு, அகமதாபாத் ஆகிய நகரங்களில் அமெரிக்க துணைத் தூதரங்கள் திறக்கப்பட உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
ஐந்து மணி நேரத்தில் ரூபாய் ஐந்து கோடிக்கு ஆடுகள் விற்பனை!
இதனிடையே, அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து நாட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றார்.