மலேசியாவில் இருந்து திருச்சிக்கு ஆமைகளைக் கடத்தி வந்த நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
எழுத்தாளர்கள் உதயசங்கர், ராம் தங்கம் ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு!
மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா விமான பயணிகளை திருச்சி மண்டலத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது, இந்திய அரசால், தடைச் செய்யப்பட்ட ‘ஸ்லைடர்’ ரக ஆமைகளை, இரண்டு பேர் அட்டைப் பெட்டிக்குள் அடைத்து மறைத்து வைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது.
ஐந்து மணி நேரத்தில் ரூபாய் ஐந்து கோடிக்கு ஆடுகள் விற்பனை!
ஆமைகளைக் கடத்தி வந்த நபர்களை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஆமைகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளை வனத்துறையினரிடம் ஒப்படைப்பதா? மலேசியாவுக்கு திருப்பி அனுப்புவதா? என அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.