பொதுக்கூட்டத்தின்போது திடீரென வீசிய பலத்த காற்றில் மேடை சரிந்தது
ஆந்திர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் பேசி கொண்டுருந்த மேடை திடீரென பலத்த காற்று வீசியதில் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் நுஜிவீடு மண்டலம் பட்டுலவாரிகூடத்தில் தெலுங்கு தேச கட்சியின் சார்பில் ’எதிர்கால உத்தரவாதம்’ என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் உள்துறை அமைச்சர் நிம்மகாயல சின்னராஜப்பா கலந்துகொண்டு உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த காற்று வீசிய நிலையில் மேடை சரிந்தது விழுந்தது.
இதில் முன்னாள் எம்.பி. மாகந்தி பாபு காலில் பலத்த காயம் அடைந்த நிலையில் நுஜிவீடு தெலுங்கு தேசம் கட்சி பொறுப்பாளர் முத்தரபோய் வெங்கடேஸ்வர ராவ் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை நூஜிவீட்டில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.