துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் தனது 62 வது படமான ‘விடாமுயற்சி‘ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை தடம், தடையற தாக்க, கலகத்தலைவர் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நீராவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
மேலும் படத்தில் அஜித் மிரட்டலான தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் போஸ்டரில் ‘EFFORTS NEVER FAIL’ என்று குறிப்பிட்டிருப்பதால் விடாமுயற்சி திரைப்படம் வெறித்தனமாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறாக இந்த படம் குறித்த அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருந்தாலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தொடர்பான எந்த தகவலும் வெளிவரவில்லை.
ஏற்கனவே இந்த படம் மாதத்தில் தொடங்க வேண்டிய நிலையில் ஒரு சில காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இதன் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என்று தற்போதைய தகவலில் தெரியவந்துள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.